போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெடுவாசல் கிராம மக்கள் கூறுகையில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் எங்களை ஏமாற்றும் நோக்கத்தில் பொய்யான வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

Special Correspondent

முதலில் இதை நம்பிய நாங்கள் போராட்டத்தை நிறுத்தினோம் பின்பு உண்மையை உணர்ந்து 15 நாட்களாக போராடி வருகிறோம் நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்த்தும் வகையில் கண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

நாள்தோறும் பல்வேறு வகை நூதன போராட்டம் நடத்தி திட்டம் வேண்டாம் என்று கதறி வருகிறோம். இது மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியாதா? இவர்கள் எங்களை கண்டுகொள்ளாமல் சித்ரவதை செய்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். இல்லையேல் எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவோம்’ என்று கோபமாக சொல்கின்றனர்.

இன்று 16வது நாளாக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நெடுவாசல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு