எளிதாக அணைத்து மிட கூடிய தீ விபத்தை வேண்டுமென்று அலட்சியம் காட்டியதோடு மட்டும் இல்லாமல் கட்டிடமே இடிந்து போகட்டும் என்றும் வேண்டும் என்றே செயல் பட்டனர் என்று கூறிய சென்னை சில்க்ஸ் நிர்வாகிகள் ., தீயணைப்பு துறை தலைமை ஜார்ஜ் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு ௧௨ மணி நேரம் கழித்தே வந்ததை சுட்டி கட்டி மேற் கொண்டு தெரிவித்த விவரம்

Special Correspondent

விடியற்காலை 4 மணிக்கு தீப்பிடிச்சதும் தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லப்பட்டது. அவங்க கடைக்கு வந்து சேரும் போது 4.30 மணி ஆகிடுச்சு. வந்ததும் அவங்க சொன்ன முதல் விஷயம், ‘டீசல் இல்லை.. போய் வாங்கிட்டு வரச் சொல்லுங்க...’ என்பதுதான். எங்க ஆட்கள்தான் போய் டீசல் வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க.

வண்டியை வேற லொக்கேஷன்ல திருப்பி நிறுத்தி தண்ணீரை அடிக்க கூட அவங்க தயாராக இல்லை. அந்த லோடுல தண்ணீர் தீர்ந்து போனதும், அடுத்த லோடு தண்ணீர் வரவே இல்லை. ‘ரெண்டு லாரி தண்ணி வாங்கி கொடுங்க..’ என்று அப்பவும் எங்ககிட்டதான் கேட்டாங்க. அதையும் நாங்கதான் செஞ்சோம்.

இதுக்கெல்லாம் நேரம் ஆகிட்டே இருந்துச்சு. இப்படி லேட் ஆக, ஆக தீ வேகமாக எரிய ஆரம்பிச்சுது. ஏர்போர்ட்டில் ஃபோம் பயன்படுத்தி தீயை அணைப்பாங்க. நாங்கதான் அவங்களோட பேசி, அங்கிருந்து ஒரு வண்டியை கொண்டு வந்தோம்.

நாங்க இங்கே இருக்கும்போது நீங்க எதுக்கு வந்தீங்க?‘னு அவங்களையும் உள்ளே விடாமல் அரை மணி நேரம் பிரச்னை செஞ்சாங்க. அதுக்குப் பிறகுதான் அவங்களை அனுமதிச்சாங்க. இப்படி ஒவ்வொரு விசயத்திலும் அவங்க தாமதம் செஞ்சிட்டே இருந்தாங்க. அதனால்தான் தீ வேகமாக பரவிடுச்சு.

எங்கே மேல தப்பு இருந்தால் நடவடிக்கை எடுங்க. அதே நேரத்துல இனி எங்காவது தீ விபத்து நிகழ்ந்தால் இப்படியெல்லாம் அலட்சியமாக இருக்க வேண்டாம்னு சொல்லுங்க. பணம் கேட்டால் நாங்க கொடுக்கப் போறோம். அதுக்காக எரியுற வீட்டுல புடுங்குறது லாபம் என்கிற மாதிரி தீ எரிஞ்சிட்டு இருக்கும்போது, இதைக் கொண்டு வாங்க.. அதைக் கொண்டு வாங்க... இதெல்லாம் யாரு செய்வாங்கன்னு சொல்லி தீயணைப்பு துறைக்காரங்க பண்ணின ரவுசு தாங்க முடியலை என்று புலம்பி தள்ளியதோடு நில்லாமல்...

தயவு செஞ்சி இனி யாருக்கும் இப்படி ஒரு அவலம் வராமல் நடக்காம பார்த்துக்கங்க...’ என்று தமிழநாட்டு முதல்வரை சந்தித்து சொல்லி இருக்கிறார்கள்.

எதிலும் கமிட் செய்ய விரும்பாமல் ‘இதெல்லாம் எனக்குத் தெரியாது. யாரும் சொல்லவும் இல்லை. நான் நடவடிக்கை எடுக்குறேன்..’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லி அனுப்பினாராம் எடப்பாடி பழனிசாமி. என்று வருத்தத்தில் உள்ளார்கள் சென்னை சில்க் நிர்வாகிகள்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு