மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கு தடைவிதித்ததற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே சென்னை ஐ.ஐ.டியிலிலும் மாட்டுக்கறி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த விழாவை ஏற்பாடு செய்த ஆய்வு மாணவர் சூரஜை வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக தாக்கினர். அப்போது ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Special Correspondent

மேலும் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து ஐ.ஐ.டி வளாக்கத்துக்கு முன்னர் முற்போக்கு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதில் இளம் பெண் ஒருவரின் கையை பெண் போலீஸ் ஓடித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனால் ஐ.ஐ.டியில் ஒரு அமைதியற்ற சூழல் நிலவியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஐ.டி மாணவி டிட்டி மேத்யூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், "சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். ஐஐடி வளாகத்தில் சுமுக நிலை திரும்பும் வரை சூரஜை தாக்கிய மணிஷை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்‘’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Special Correspondent

அப்போது ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு 800 மாணவர்களுக்கு இமெயில் அனுப்பி உள்ளோம். சம்பவம் தொடர்பாக மூத்த பேராசிரியர் தலைமையில் ஏற்கெனவே குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

ஐஐடி சென்னை உயர் மட்ட நிர்வாகத்தின் உள் விசாரணையை முழுவதும் ஏற்காத நீதிபதிகள், ஐ.ஐ.டியில் சுமுக நிலைமை திரும்புவதற்கு கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜூன் 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவால் ஐஐடி நிர்வாகம் கலங்கி போய் உள்ளதாக அங்கு பயிலும் மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு