ஆதார் தகவல்களை அரசு இணைய தளங்களில் வெளியிட்டால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆதார் எண்ணிற்காக தனது விரல் ரேகைகளை பதிவு செய்யும் காட்சிகள் டுவிட்டரில் வெளியிடப்பட்டன. இதனை கண்டித்து தோனி மனைவி சாக்ஷி சட்ட அமைச்சரிடம் புகார் தெரிவித்த நிலையில், முதலில் அதனை ஏற்க மறுத்த சட்ட அமைச்சர் பின்னர் தனது தவறை உணர்ந்து திருத்தி கொண்டார்.

Special Correspondent

இதேபோல், லட்சக்கணக்கான ஆதார் தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள் பிஜேபி ஆளும் மாநில ஜார்கண்ட் அரசு இணைய தளத்தில் வெளியாகின.

இச்சம்பவங்களுக்கு பிறகு, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் அர்ஜுனா சுந்தரராஜன், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு கடந்த ஏப்.,24ல் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுமக்களின் ஆதார் தகவல்கள், கைரேகை விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் அரசு இணைய தளங்களில் வெளியான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபோல் செயல்படுவது ஆதார் சட்டத்திற்கு புறம்பானது.

இந்த செயலுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அதே போல், வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவது தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் செயல். இத்தவறு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அரசு இணைய தளங்களில் வெளியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தனியார் கம்பெனி ரிலையன்ஸ் எப்படி ஆதார் கார்டு வாங்கி கொண்டு அலைபேசி சேவை கொடுத்தது தொடர்பாக விசாரணை அல்லது தண்டனை பற்றி எதுவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கவில்லை.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு