சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகள் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் கர்ணன் மனநிலை குறித்து மே 5ஆம் தேதி பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் தற்போது கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் நீதிபதிகளுக்கு எதிராக பரபரப்பு ஊழல் புகார்களை வெளியிட்டு பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார்.

Special Correspondent

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததுடன் கோர்ட்டில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராக மறுத்து விட்டார். இதனால் அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. அதன்பிறகு நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுடன் காரசார வாதத்தில் ஈடுபட்டார். எந்த உத்தரவையும் ஏற்க மாட்டேன் என்று மறுத்தார்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகள் 28-ந்தேதி தன் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். அதன்பிறகு அவர் புதிய உத்தரவுகள் பிறப்பித்தார். அதில் இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆஜராகாததால் அவர்கள் மீண்டும் வருகிற 1-ந்தேதி ஆஜராக வேண்டும். அத்துடன் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளும் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 8 நீதிபதிகள் மீதான புகார்கள் மிகவும் மோசமானது. சாதிய ரீதியிலானது, இது சட்டப்படி தண்டனைக்குரியது என்றும் நீதிபதி கர்ணன் தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

நீதிபதி கர்ணனின் செயல்பாடுகளால் அதிர்ந்துபோன உச்சநீதிமன்றம், மே 5ஆம் தேதி நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதற்கும் அசைந்து கொடுக்காத கர்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகளுக்கு மூளை குழம்பி விட்டது, அவர்களுக்கு மனநிலை மருத்துவம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு