N.S.G. எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலேயே மொத்தம் 16 வி.வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே, என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு உரியவர்கள்.

Special Correspondent

பொதுவாக, வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பானது Y, Y-பிளஸ், X, X-பிளஸ், Z, Z-பிளஸ் என வகைப்படுத்தப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர், முக்கிய அரசியல் பிரபலங்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என்ற ரேங்கில் உள்ளவர்களுக்கு ஒய் மற்றும் ஒய் பிளஸ் பிரிவில் உள்ளவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இப்போது ஓ.பன்னிர் செல்வத்துக்கு ஒய் பிரிவில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு Z- பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தக் கருப்புப் பூனைப் படையினர் அனைவரும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.

ஒரு வி.வி.ஐ.பி-க்கு 40 என்.எஸ்.ஜி வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஷிப்ட் அடிப்படையில் செயல்படும் இவர்களில் ஒரு ஷிப்டில் ஒரு குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். அந்தக் குழுவில் ஐந்து ரேஞ்சர்கள் இருப்பார்கள் ஒரு உதவி ஆணையர் ரேங்க்கில் உள்ளவர் தலைமை தாங்குவார்.

என்.எஸ்.ஜி.யைப் பொறுத்தவரை ஒரு வி.வி.ஐ.பி அவரது வீட்டில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்துவிட்டு, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்பி வரும்வரை சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு இவர்களின் பொறுப்பில்தான் இருக்கும்.

Special Correspondent

ஒவ்வொரு வி.வி.ஐ.பி-க்கும் தனிப்பட்ட மெய்க்காவலர்கள், பாதுகாவலர்கள் தவிர, மாநில அரசு அளிக்கும் கமாண்டோ பாதுகாப்பும் இருக்கும். அவர்களுக்கும் அடுத்த உயர் பாதுகாப்புதான் என்.எஸ்.ஜி. ஒரு வி.வி.ஐ.பி வீட்டில் இருந்து புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக, இவர்கள் தயாராக இருப்பார்கள். அதுவரை வி.வி.ஐ.பி-யின் தனிப் பாதுகாவலர்கள் மற்றும் மாநிலப் பாதுகாப்புப்படை வசம் உள்ள வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு என்.எஸ்.ஜி-யிடம் ஒப்படைக்கப்படும்.

மீண்டும் இருப்பிடத்திற்கு வந்த பிறகு உள்ளுர் பாதுகாப்பு மற்றும் மெய்க்காவலர்களிடம் வி.வி.ஐ.பி-யை ஒப்படைத்து விட்டு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்ற பிறகே, என்.எஸ்.ஜி அங்கிருந்து நகரும். ஒருவேளை அந்த வி.வி.ஐ.பி வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்கிறார் என்றால், அவரோடு மெய்க்காவலர்கள் தவிர, ஒரு தலைமை என்.எஸ்.ஜி ரேஞ்சரும் உடனிருப்பார். இந்த நிலையில் பதில் சொல்லப்படாத கேள்விகள் மத்திய அரசை நோக்கி குவிய தொடங்கி உள்ளன.

1. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, உள்ளுர் பாதுகாப்பு மற்றும் மெய்க்காவலர்களிடம் ஜெயலலிதாவை ஒப்படைத்து விட்டு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்ற பிறகே, என்.எஸ்.ஜி அங்கிருந்து நகர வேண்டும், அப்படி தான் செய்தார்கள் என்றால் அந்த ஆவணம் உள்ளதா?

2. மருத்துவமனைக்கு என்.எஸ்.ஜி போயிருந்தால் அந்தப் படையின் உயர் அதிகாரி, ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்பட்டாரா?

3. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் தவிர, 75 நாட்கள் என்எஸ்ஜி அனுப்பிய தினசரி அறிக்கை என்ன?

4. 75 நாட்களுமே காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் என்.எஸ்.ஜி அதிகாரிகள் ஜெ-வை பார்க்க அனுமதிக்கப்பட்டார்களா?

5. அப்படி பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றால், ஜெ-வின் உடல்நிலை அறிக்கை பற்றி, என்.எஸ்.ஜி-க்கு என்ன வேலைகளை செய்ய வேண்டும் என்று தகவல் கொடுத்தது யார் ?

6. ஜெயலலிதாவை நேரில் சந்திக்காமல் அறிக்கை அனுப்பப்பட்டதா?

7. ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அறிக்கை அனுப்பப்பட்டதா?

8. அறிக்கை அனுப்பி இருந்தும் அதனை, உள்துறை அமைச்சகம் மறைத்து விட்டதா?

9. ஜெயலலிதா போன்ற வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டிய என்.எஸ்.ஜி அதில் இருந்து தவறி விட்டதா?

10. அல்லது உள்துறை அமைச்சகம் உத்தரவின் படி தவறு செய்துள்ளதா?

பதிலளிக்க வேண்டியது, மத்திய உள்துறை அமைச்சகமே! விளக்குமா மத்திய மோடியின் அரசு!!

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு