தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களில் 50 சதவீதம் இடஒதுக்கீடு அரசுக்கு வழங்க வேண்டும் என மருத்துவர் காமராஜ் உள்ளிட்டோர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வரும் 2017 கல்வியாண்டில் இருந்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களில் 50 சதவீதம் இடஒதுக்கீடு அரசுக்கு வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு மட்டுமே பொருந்தும் .

Special Correspondent

பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களுக்கு அவர்கள் தீர்ப்பு வந்துள்ளது என்ற மகிழ்ச்சியை போராடும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

ஏற்கனவே வழக்கு நடந்த வேலையில் உயர்நீதி மன்றம் கவுன்சிலிங் விபரங்கள் மற்றும் இடஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை போன்றவை குறித்த விபரங்களை 2000வது ஆண்டில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும், கல்லூரிகளின் தரம், மாணவர்களின் விவரங்கள் மற்றும் கல்லூரி சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் கல்லூரி நிர்வாகம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதை இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசும் விபரங்களை தரவில்லை இந்த நிலையில் தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் 50 சதவீத மருத்துவ இடஒதுக்கீட்டில் மெத்தனமாக நடந்து கொண்டதற்காக உயர்நீதி மன்றம் இருவருக்கும் தனி தனியே ஒரு கோடி ரூபாய் அபராதம் அளித்துள்ளது. இந்த ஒரு கோடி ரூபாயை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு வழங்க தமிழக அரசுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு