தமிழக புதுச்சேரி வக்கீல்கள் போராட்டம் அறிவிப்பு

நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள் கிழமை 20-03-2017 நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று...   

பதிவை பகிர

தமிழக புதுச்சேரி வக்கீல்கள் ஒரு நாள் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்

1) நீதிமன்ற முத்திரை கட்டண உயர்வு குறித்து 17.2.2017 அன்று தமிழக அரசு அறிவித்த அரசாணையை மறுசீராய்வு செய்து, புதிய அரசாணை பிறப்பிக்கவேண்டும் என்றும்,

2) வக்கீல்கள் சேம நல நிதியை ₹10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும்,

3) இளம் வக்கீல்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு, புதுச்சேரியில் வழங்குவதை போல மாதம் ₹3 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும்

4) சென்னை உயர் நீதிமன்ற கிளை ஒன்றை, தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள் கிழமை 20-03-2017 நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று சனிக்கிழமை நடந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

sm 3.15

இதில் கலந்து கொண்ட ஓசூர் வக்கீல்கள் சங்க தலைவர் சிவசங்கர் தலைமை வகித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வேல், பொருளாளர் காமராஜ் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்தது.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

பின்பற்ற

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் தனியுரிமை கொள்கை.