கர்நாடகம் கொடுத்த ஷாக் : அதிமுக அதிர்ச்சி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.   

பதிவை பகிர

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை எப்படி வசூலிப்பது என்று விளக்கம் கேட்டு கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

மரணம் அடைந்தவர்களுக்கு தண்டைனையை ரத்து செய்யலாம் என்றும் அபராத்ததை மட்டும் வசூலிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை விளக்கம் தருமாறு கர்நாடக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளது. மேலும் அபராதத்தை வசூலிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யவும் மனுவில் கூறியுள்ளது.

sm 3.15

ஒரு குற்றவாளி இறந்தவுடன் ,அவர் மீதான சட்ட நடைமுறைகளும், அதன் செயல்பாடுகளும் முடிவுக்கு வந்து விடும். ஆனால், இறந்து போன ஊழல் குற்றவாளியின் சொத்துக்களை கைப்பற்றி,மீண்டும் அரசு கஜானாவுக்கு கொண்டு வருவது குறித்து, ஒரு சீராய்வு மனு வருவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதன்முறை. ஆகவே, இந்த மறு சீராய்வு மனுவை,உச்சநீதிமன்றம் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது இது ஓர் முன்னோடி வழக்காக (Precedent Case Law), மாறும் என்று சொல்கிறார் வழக்கறிஞர் திலகர்.

ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதம் கட்ட வேண்டாம் என்று சில பிரபல செய்தி ஆசிரியர்கள் அதிமுக ஆதரவாக சொத்து குவிப்பு வழக்கின் தண்டனையை நீர்த்து போகும் வகையில் மாற்றி பேசி வந்த நிலையில் இந்த மனு அதிமுகவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்று அதிமுக ஓ பன்னிர் செல்வம் அணி சேர்ந்த முக்கிய நிர்வாகி தெரிவித்தார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

பின்பற்ற

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் தனியுரிமை கொள்கை.