3321 மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் நெடுஞ்சாலைகளில் உள்ள பார் மற்றும் விடுதிகளில் மதுபானங்களை விற்கக்கூடாது என்றும்…   

பதிவை பகிர

தமிழகத்தை தவிர பிற மாநிலங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை நாளை முதல் மூட உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

தமிழகத்தில் அரசே மதுக்கடைகளை நடத்துவதால், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலையிலிருந்து 100-மீ சுற்றளவுக்குள் மதுக்கடை அமைக்க அரசு அனுமதி கோரியிருந்தது. அந்த தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தான் முதலில் நிர்ணயித்த 500 மீட்டர் தொலைவை 220 மீட்டராக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 20,000-க்கும் குறைவான மக்கள் உள்ள பகுதியில் 220 மீட்டரில் மதுக்கடைகள் இருக்கலாம் என்றும், பிற பகுதிகளில் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மதுக்கடைகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

மேலும் நெடுஞ்சாலைகளில் உள்ள பார் மற்றும் விடுதிகளில் மதுபானங்களை விற்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த உத்தரவு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மதுக்கடைகளை அரசுடமை ஆக்கி வருடம் தோறும் அதிகரித்து வருமானம் பார்த்த தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் அதிமுக அரசு 3.14 லட்சம் கோடி கடன்களை ஏற்றி தத்தளித்து வரும் நிலையில் 3321 டாஸ்மாக் கடைகளை அப்புரப்படுத்துவதால் ஏற்படும் நிதி சுமை நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெவித்தனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

பின்பற்ற

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் தனியுரிமை கொள்கை.