சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததாகவும், இதனால்தான் உத்தரபிரதேசத்தில் பாஜ வெற்றி பெற்றதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

Special Correspondent

அதோடு நில்லாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் ஓட்டு சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் பிஎஸ்பி எஸ்பி மற்றும் ஆம் ஆத்மீ கோரிக்கைகள் வைத்தன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் ஓர் படி மேல சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தை கொடுத்தால் 72 மணி நேரத்தில் ஹேக் செய்து காட்டுகிறேன் என்று கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்றும், முறைகேடுகளை யார்வேண்டுமானாலும் நிரூபிக்கலாம் என சவால் விடுத்த நிலையில், மறுபடி மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மத்திய பிரதேச பிஜேபி மாதிரி தேர்தலில் எந்த சின்னத்தை அழுத்தினாலும் பிஜேபி சின்னமான தாமரைக்கு வாக்குகள் விழும் புகாரில் தேர்தல் ஆணையம் சிக்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும், அரசியல் கட்சிகளின் ஐயத்தை போக்கும் விதத்திலும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரங்களை பயன்படுத்துவது அவசியம் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உச்சநீதி மன்றமும் நோட்டீஸ் அனுப்பியதால் இந்த இயந்திரங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரியையை மத்திய மோடியின் அரசுக்கு வலியுறுத்தியது.

இந்நிலையில், புதிதாக 16 லட்சம் வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரங்கள் வாங்குவதற்காக ரூ.3,174 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இயந்திரங்கள் பயன்படுத்துவதன் மூலம் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் அறிந்துகொள்ள முடியும். 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படும் என்று சொன்னலும் அது 100 சதவீதம் எப்படி சாத்தியமாகும் என்று கேள்விகளை எதிர்கட்சிகள் எழுப்பியுள்ளனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு