இந்தியா முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என 4 மண்டலங்களில் 94 தலைமை தபால் நிலையங்கள் உட்பட மொத்தம் 12 ஆயிரத்து 185 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

தமிழகம் முழுவதுமாக உள்ள அஞ்சலகங்களில் 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர்.

தபால் அலுவலகங்களில் தபால் மற்றும் பார்சல் சேவையுடன் வங்கி சேவைகளுடன் கூடிய ஏடிஎம் வசதி, பாஸ்போர்ட் பெறும் வசதி என தொடங்கப்பட்டு., அஞ்சல் துறையில் ரூ.50 இருப்புத்தொகையில் வங்கி சேமிப்பு கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு RUPAY ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டது.

Special Correspondent

அவர்கள் தபால் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். சர்வீஸ் சார்ஜ் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டினர்.

இவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கும்போது ரூபே (RUPAY) ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டது. ஆனால் இந்த கார்டுகளை வாடிக்கையாளர்கள் ரெடிமேட் ஷோரூம்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் போன்றவற்றில் பயன்படுத்த இயலவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்நிலையில் இதை போக்குவதற்காக தமிழகத்தில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு புதிய எலக்ட்ரானிக் சிப் பொருத்திய ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும். மேலும் இந்த கார்டு வழங்கப்பட்ட பின்னர் வாடிக்கையாளர்கள் அந்த ஏடிஎம் கார்டுகளை வங்கி ஏடிஎம்களை போல் அனைத்து பயன்பாட்டிற்கும் உபயோகிக்கலாம் என்றும் தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு