நாட்டில் உள்ள அனைத்து விதமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

காஷ்மீர் தலைநகரில் கடந்த மாதம் 19ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 1,200 பொருட்கள் மற்றும் 500 சேவைகளுக்கு 5,12,18 மற்றும் 28 என நான்கு விதமாக ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த 3ம் தேதி டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 15வது கூட்டத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு புதிய வரி விகிதமாக 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 16வது கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் கடந்த 11ம் தேதி நடந்தது.

Special Correspondent

பலத்த எதிர்ப்பை சந்தித்த காரணத்தினால் இதில் சினிமா டிக்கெட், இன்சூலின், ஊறுகாய், அகர் பத்தி உட்பட 66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 17வது கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. இதில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஜிஎஸ்டி வரிக்கு வியாபாரிகள் மற்றும் கம்பெனிகள் யாரும் இன்னும் தயாராக வில்லை. அதனால் ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவதை ஒத்திப்போட வேண்டும் என தொழில்துறை நிறுவனங்கள் வலியுறுத்தின. அதனால் வியாபாரிகள் மற்றும் கம்பெனிகள் தங்கள் விற்பனை கணக்கு விவரத்தை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது உட்பட பல முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.

இதன் காரணமாக வியாபாரிகள் தங்கள் விற்பனை கணக்கு விவரத்தை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என முன்பு கூறப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் தங்கள் விற்பனை கணக்கு விவரத்தை செப்டம்பர் 5ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்றும்,

ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் இணைவதற்கு கம்பெனிகள் தங்கள் விற்பனை கணக்கு விவரத்தை செப்டம்பர் 10ம் தேதிக்கு பதில் செப்டம்பர் 20ம் வரை தாக்கல் செய்யலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

உயர்த்தப்பட்ட பல்வேறு பொருட்கள் உயர்வை இந்த முறையும் குறைக்க வேண்டிய கொடுத்த நிர்பந்தம் காரணமாக ரூ.2,500 முதல் ரூ.7500 வரை நாள் வாடகை உள்ள ஏ.சி ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மற்றும் மாநில அரசுகள் நடத்தும் லாட்டரிக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும், பொருட்களின் இந்திய நிதி அமைச்சர்கள் கவுன்சில் குறைத்து உள்ளது. ஆனால் மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற லாட்டரிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘’ஜிஎஸ்டி நெட் வொர்க்கில் இணைய இன்னும் தயாராகவில்லை எனவும், அதனால் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதை ஒத்திபோடும்படி வர்த்தக நிறுவனங்களும், கம்பெனிகளும் வலியுறுத்தின.

இதை ஒத்திபோடுவதற்கான நேரம் நமக்கு இல்லை. ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் இணைவதற்கு ஏற்படும் தாமதத்தை ஈடுகட்ட, இரண்டு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் ஜிஎஸ்டி விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்‘’ என்றார். மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம், ஜிஎஸ்டி வரி அமலாவதற்கு முதல் நாளான வரும் 30ம் தேதி நடக்கிறது. அதில் நிலுவையில் உள்ள அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும் என்றார்.

இதுவரை ஜிஎஸ்டி கவுன்சில் 17 முறை ஆலோசனை நடத்தியுள்ளது. பலத்த எதிர்ப்பின் காரணமாக அறிவிக்கப்பட்ட வரியை இதுவரை 66 பொருட்களுக்கு கடந்த 11ம் தேதி வரை வரி குறைத்த போதிலும், மேலும் பல்வேறு துறை எதிர்ப்பின் காரணமாக பல பொருட்ககளின் வரிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி லட்டுக்கு கொடுத்த வரி விலக்கு போல கருவாடு மீனுக்கு வரி விலக்கு வேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கையை கூட்டத்தில் எடுத்து சொன்னதாக தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெவித்தார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு