மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியில் நூல் கொள்முதலுக்கு 5 சதவீதம், கலர் நூலாக மாற்றும் மூலப்பொருளுக்கு 18 சதவீதம், ஜாப் ஒர்க் கொடுக்க 5 சதவீதம், எம்ப்ராய்டு வேலைகளுக்கு 18 சதவீதம் என பலமுனை வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், உற்பத்தி பொருளுக்கு 25 சதவீதம் விலை உயர்வும் ஏற்படும்.

இதனை கண்டித்து, தமிழகத்தில் கடந்த 27, 28, 29ம் தேதிகளில் ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் செய்தும் கண்டு கொள்ளாததால் 6 நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்து நேற்று முதல் தொடங்கினர். ஈரோட்டு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், பெரியவலசு, லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 30 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Special Correspondent

இதனால், லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 700 துணி நூல் பதனிடும் ஆலைகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. கரூர் மாவட்டத்தில் விசைத்தறி மற்றும் கரூர் வீவிங் நிட்டிங் பேக்டரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, ஜக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் விசைத்தறி கூடங்களும், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள 7 ஆயிரம் விசைத்தறிக்கூடங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல், சேலம், நெல்லையிலும் விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை. இதனை தவிர தீப்பெட்டி தொழிற்சாலை 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்கக்கோரி தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், குடியாத்தம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 400 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளை அடைத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் நேற்று 6வது நாளாக நீடித்து வருவது என்பது கவலை தரும் விஷயமாக கருதுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெவித்தனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு