பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை சாய்னா 6 லட்சம் நிதி உதவி

நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்ததோடு நில்லாமல்...   

பதிவை பகிர

பிஜேபி அரசின் ஆட்சியில் ராமன் சிங்க் தலைமையில் நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜா என்ற பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது, நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர், மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

sm 3.15

இந்நிலையில், நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்குவதாக பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் அறிவித்ததோடு நில்லாமல் உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.50,000 வீதம் 12 வீரர்களின் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.6 லட்சம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து சாய்னா கூறியதாவது, கடந்த வாரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் இழப்பு தனக்கு மிகவும் வேதனை அளித்தது, நமது பாதுகாப்புக்காக அவர்களது வாழ்க்கையை துறந்த அந்த வீரர்களின் இழப்பு தன் இருதயத்தை வருத்தியது என்றும் எனவே அவ்வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யும் விதமாக ரூ.6 லட்சம் வழங்குவதாக சாய்னா தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கில் பணத்தில் புரளும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதுவும் செய்யாத நிலையில் அவர்களை காட்டிலும் குறைந்த வருமானம் பெறும் பெண் விளையாட்டு வீராங்கனை நேற்று தனது இருபத்தி ஏழாவது பிறந்த நாளில் அவரின் இந்த செயல் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

பின்பற்ற

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் தனியுரிமை கொள்கை.